පුවත් හා සිදුවීම්
தேசிய புடவை கைத்தொழில் சிறு மற்றும் மத்திய தர வியாபாரிகள்,மாகான சபை நிறுவனங்கள் மற்றும் புடவை கைத்தொழில் கூட்டுறவு சங்கங்களின் வியாபார வாய்ப்புக்களினை அதிகரித்துக் கொள்ளல், தேசிய மற்றும் சர்வதேச புது நுகர்வோர்களுக்கிடையில் புடவை கைத்தொழில் துணிகளினை பிரபல்யப்படுத்துதல் மற்றும் இலகுவான மற்றும் சாதாரண விலைகளின் கீழ் உயர் தரமான உற்பத்திகளை சந்தைபடுத்துவதனை நோக்காகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் விற்பனை சந்தையொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாத பண்டிகை காலங்களினை நோக்காகக் கொண்டு இவ் விற்பனை சந்தை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதோடு திணைக்கள இணையதளம் (தொலைகாட்சி பெட்டி மற்றும் வானொலி) மற்றும் அச்சு (பத்திரிகை,விளம்பரம்) மூலம் அறியப்படுத்தல்
புது நிர்மாணங்களை அறிமுகப்படுத்தல் இத்துறை வியாபாரிகளினை ஊக்குவித்தல், வடிவமைப்பாளர்களின் மறைந்துள்ள திறமைகளினை மேம்படுத்தும் நோக்கில் தேசிய கைத்தறி புடவை கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக,
• மாகாண புடவை கைத்தொழில் திணைக்களம்/கைத்தொழில் திணைக்களம்
• புடவை கைத்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கம்
• தனியார் வியாபாரிகள்
• புடவை கைத்தொழில் திணைக்களத்தின் நருவாகிகளும் பங்குபற்றுவார்கள்.
• திணைக்களத்தின் இணைய தளம் மூலம் தகவல்களினை பெற்றுக் கொள்ள முடியும்.
கைத்தறி புடவை கைத்தொழில் மக்கள் மத்தியில் பிரயல்யப்படுத்துவதற்கு சர்வதேச சந்தைக்கு புது கைத்தறி நிர்மாணங்களினை அறிமுகப்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கைத்தறி புடவை கைத்தொழில் கண்காட்சிக்கு சார்பாக நடாத்தப்படும் வடிவமைப்பு கண்காட்சியின் மூலம் மாற்றமடைகின்ற வடிவமைப்பு உலகின் புது அனுபவங்களினை பெற்றுக் கொள்வதற்கு நிர்மாணிக்கின்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக அலங்கார துறையின் நிபுணர்கள் அவர்களின் நிர்மாணங்களினை முன்வைக்கப்படுவதோடு புது வருகையாட்கள் அவர்களின் திறமைகளினை வெளிக் கொண்டு வருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
தேசிய கைத்தறி துணி உற்பத்தி கைத்தொழிலினை கட்டியெழுப்புதல் மற்றும் அதன் ஊக்குவிப்பதற்காக 06 மாத காலம் தொடர்ந்த பயிற்சியினை பூரணப்படுத்திய புடவை கைத்தொழில் செயற்றிட்டங்களினை உபயோகித்து புடவை கைத்தொழில் கிராமங்களினை அமைத்தல் மற்றும் அதன் மூலம் நடைமுறைபடுத்தப்படும். சிறந்த முறையில் பயிற்சியினை பூரணப்படுத்திய பயிற்சியாளர்களுக்கு கைத்தறி, உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்கள் திணைக்களம் மூலம் வழங்கப்படும்.